
நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள்
இரயில்வே கடவுகளில் வாகன காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்கும் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கும் இரயில்வே கடவுகளுக்கு மாற்றாக இரயில்வே துறையுடன் ஒருங்கிணைந்து 50:50 பணப்பகிர்வின் அடிப்படையில் இரயில்வே மேம்பாலங்கள்/ கீழ்பாலங்கள் அமைப்பது திட்டங்கள் அலகின் முதன்மைப் பணியாகும்.
மேலும் மாநில நிதியின் கீழ், உயர்மட்டப்பாலங்கள் அமைத்தல், பழுதடைந்த மற்றும் குறுகிய பாலங்களை திரும்பக் கட்டுதல், பல்வழிச்சாலை மேம்பாலங்கள் அமைத்தல், பெருநகரங்களில் உயர்மட்ட சாலை வழித்தடம் அமைத்தல், புறவழிச்சாலைகள் மற்றும் வட்டச்சாலைகள் அமைத்தல் ஆகிய பணிகள் இவ்வலகின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திட்டங்கள் அலகானது தலைமை பொறியாளரின் கீழ் 4 வட்டங்கள் மற்றும் 11 கோட்டங்கள் மூலம் செயல்பட்டு வருகிறது.
செயல்கள் :
- இரயில்வே திட்டப்பணிகளின் கீழ் இரயில்வே கடவுகளுக்கு பதிலாக இரயில்வே மேம்பாலங்கள் மற்றும் கீழ்பாலங்கள் கட்டுதல்.
- முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச்சாலைகள், வட்டச் சாலைகள் மற்றும் ஆரச்சாலைகள் அமைத்தல்.
- உயர்மட்டப்பாலங்கள் கட்டுதல்.
- பெரிய நகர சந்திப்புகளில் உயர்மட்டச் சாலை வழித்தடம், பல்வழிச்சாலை மேம்பாலங்கள் கட்டுதல்.
செயலாக்கப்பட்ட திட்டங்கள் :
1. இரயில்வே திட்டப்பணிகள் :
இரயில்வே கடவுகளில், காத்திருப்பு நேரம், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்ப்பதற்காக இரயில்வே கடவுகளுக்கு மாற்றாக இரயில்வே மேம்பாலம்/ கீழ்பாலங்கள் கட்டப்படுகிறது.
இரயில் வாகன அலகு ஒரு இலட்சத்திற்கு மேல் உள்ள இரயில்வே கடவுகளுக்கு மாற்றாக இரயில்வே மேம்பாலம்/ கீழ்பாலங்கள் கட்டும் பணியானது இரயில்வே துறையுடன் ஒருங்கிணைந்து 50:50 பண பகிர்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இரயில்வே மேம்பாலங்கள்/ கீழ்பாலங்களில் உள்ள அணுகுசாலைகள் மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் கட்டப்படுகிறது. இரயில்வே பகுதி இரயில்வே துறையால் கட்டப்படுகிறது.
- இரயில்வே திட்டப் பணிகளின் கீழ், 2021-22 ஆம் நிதி ஆண்டில் 89 பணிகள் நிலுவைப்பணிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில், 44 பணிகளுக்கு ரூ.1345.75 கோடி மதிப்பில் கட்டுமான பணிகளுக்கான நிர்வாக ஒப்புதலும் மீதமுள்ள 45 பணிகளுக்கு ரூ.338.50 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல்/ முதற்கட்ட பணிகளான நில எடுப்பு, பயன்பாட்டு உபகரணங்களை மாற்றியமைத்தல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன.
- கட்டுமான பணிக்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட 44 பணிகளில், 2 பணிகள் ரூ.46.70 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டுள்ளன மற்றும் 22 பணிகள் ரூ.736.50 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 20 பணிகள் ரூ.562.55 கோடி மதிப்பில் கட்டுமான பணிக்கு முந்தைய பல்வேறு நிலைகளில் உள்ளன.
- 2020-21 ஆம் நிதி ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் ரூ.285.82 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2021-22 ஆம் நிதியாண்டிற்கு ரூ.901.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2. மாநில நிதி :
- மாநில நிதியின் கீழ், 2021-22 ஆம் நிதி ஆண்டில் 116 பணிகள் (75-ஆற்றுப்பாலங்கள், 29 புறவழிச்சாலைகள்/ சாலைப்பணிகள், 8 இரயில்வே மேம்பாலங்கள் மற்றும் 4 பல்வழிச்சாலை மேம்பாலங்கள்/ உயர்மட்டச்சாலை வழித்தடம்) நிலுவைப்பணிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டன. அவற்றில், 30 பணிகளுக்கு ரூ.2207.18 கோடி மதிப்பில் கட்டுமான பணிகளுக்கான நிர்வாக ஒப்புதலும் மீதமுள்ள 86 பணிகளுக்கு (53 ஆற்றுப்பாலங்கள், 7 இரயில்வே மேம்பாலங்கள், 24 புறவழிச்சாலைகள்/ சாலைப்பணிகள் மற்றும் 2 பல்வழிச்சாலை மேம்பாலங்கள்/ உயர்மட்டச்சாலை வழித்தடம்) ரூ.316.36 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் / முதற்கட்ட பணிகளான நிலஎடுப்பு, பயன்பாட்டு உபகரணங்களை மாற்றியமைத்தல் ஆகிய பணிகளுக்கு நிர்வாக ஒப்புதலும் பெறப்பட்டுள்ளன.
- கட்டுமான பணிக்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட 30 பணிகளில், ஒரு ஆற்றுப்பாலப்பணி ரூ.90.96 கோடி மதிப்பிலும் ஒரு சாலைப்பணி ரூ. 1.97 கோடி மதிப்பிலும் முடிக்கப்பட்டுள்ளது. 23 பணிகள் (19 ஆற்றுப்பாலங்கள், 2 புறவழிச்சாலைகள்/ சாலைப்பணிகள் மற்றும் 2 பல்வழிச்சாலை மேம்பாலங்கள்/ உயர்மட்டச்சாலை வழித்தடம்) ரூ.1980.89 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன மற்றும் 5 பணிகள் (2 ஆற்றுப்பாலங்கள், 1 இரயில்வே மேம்பாலம் மற்றும் 2 புறவழிச்சாலைகள்) ரூ.133.36 கோடி மதிப்பில் கட்டுமான பணிக்கு முந்தைய பல்வேறு நிலைகளில் உள்ளன.
- 2021-22ல், 2 புறவழிச்சாலைகள், 1 உயர்மட்டச் சாலை வழித்தடம், 2 பல்வழிச்சாலை மேம்பாலம் (ம) 2 இரயில்வே மேம்பாலப் பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ. 4.70 கோடி நிர்வாக ஒப்புதல் அரசினால் வழங்கப்பட்டுள்ளது.
- 2020-21 ஆம் நிதியாண்டில் மாநில நிதியின் கீழ் ரூ.351.02 கோடி செலவிடப்பட்டது. 2021-22 ஆம் நிதியாண்டிற்கு ரூ.657.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3. தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாடு வாரியம் - திட்ட தயாரிப்பு நிதி:
14 இரயில்வே மேம்பாலம்/ கீழ்பாலங்கள், 9 ஆற்றுப்பாலங்கள் மற்றும் 2 புறவழிச்சாலைப் பணிகளுக்கு ரூ. 6.88 கோடி மதிப்பில் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரிய - திட்ட தயாரிப்பு நிதியின் கீழ் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
![]() |
![]() |